Monday, March 23, 2009

ஜனநாயகம் என்னும் கேலிக்கூத்து

தேர்தல் வந்து விட்ட்து. மக்களை ஆட்சி செய்ய மக்களால் தேர்ந்தெடுக்கப்ப்டும் மக்கள் பிரதிநிதிகளே எம்.எல்.ஏ மற்றும் எம்.பிக்கள். தங்கள் பதவி காலத்தில் தாங்கள் போட்டியிட்டு ஜெயித்த் தொகுதிக்கும், அந்த தொகுதி மக்களுக்கு நல்லதை செய்வதும் அவர்களின் கடமையாகும். ஆனால் நமது ஜனநாயகத்தில் நடக்கும் மிகப்பெரிய கேலிக்கூத்து, மக்களுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வந்ததாக கூறிக் கொள்ளும் நமது மக்கள் பிரதிநிதிகள் இரண்டிற்கு மேற்பட்ட இடங்களில் தேர்தலில் போட்டியிடுவதாகும். அவர்கள் எந்த தொகுதி மக்களுக்கு சேவை செய்ய நினைத்துள்ளார்கள் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். வோட்டு போடும் மக்களை கோமாளிகளாக்கும் இந்த முறைக்கு தேர்தல் கமிஷன் கட்டாயம் முற்று புள்ளி வைக்க வேண்டும். இன்னொன்று டெல்லியில் வசிக்கும் பஞ்சாப்பை சேர்ந்தவர் அஸ்ஸாமில் போட்டியிடலாம் என்பதான அபத்தமானவற்றை நீக்க வேண்டும். எவரும் தான் குடியிருக்கும் தொகுதியில் மட்டும்தான் போட்டியிட முடியும் என்பதே சரியாயிருக்கும். மக்களும் வோட்டு போடும்போது, தங்கள் போட்டியிடுபவர் தனது ஜாதியை சேர்ந்தவரா, இந்த கட்சியில் இருப்பவரா என பார்க்காமல், தங்கள் பகுதியை சேர்ந்த சேவை மனப்பான்மை உடைய ஓருவருக்கே ஓட்டளிக்க வேண்டும். அப்போதுதான் கட்சிகளும் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது ஜாதி பலம், பண பலம், ஆள் பலம் பார்க்காமல் நல்லவர்களை நிறுத்துவார்கள். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுபவருக்குத்தான் தனது பகுதி மக்களின் கக்ஷ்ட நக்ஷ்டங்கள் தெரியும் மற்றும் புரிந்து கொள்ள முடியும். மக்களும் தங்களுடைய குறைகளை தங்கள் பகுதியை சேர்ந்தவர் என்ற் உரிமையில் தெரியப்படுத்தமுடியும்.

1. 60 வயதுக்கு மேல் யாரும் தேர்தலில் போட்டியிட கூடாது

2. இரண்டு முறைக்கு மேல் ஜெயித்தவர்கள் போட்டியிடக்கூடாது

3. தேர்தலில் போட்டியிடுபவர்கள் தான் போட்டியிடும் தொகுதியில் குறைந்தது 5 வருடங்களாவது குடியிருக்க வேண்டும்miras-miras

No comments:

Post a Comment